Saturday, May 11, 2019

வேதம் காட்டும் வெளிச்சம் 2: இரண்டாம் ஆதாம் யார்?

வேதம் காட்டும் வெளிச்சம் 2: இரண்டாம் ஆதாம் யார்?

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.*- 1 கொரி 15:45


முதலாம் மனுஷன் ஆதாம். இரண்டாம் மனுஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து! ஆதாம் மரித்தவன்! (ஜீவாத்துமாவானவன்!). பிந்தின இரண்டாம் மனுஷனாகிய கர்த்தரோ, உயிரோடு எழுந்தவரும்; உயிர்ப்பிக்கிறவருமானவர்!

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்."-1 கொரி 15:47

மண்ணுக்கும், விண்ணுக்குமுள்ள பெரும் வித்தியாசம் இருவருக்கும் உண்டு! *முதாலாம் மனுஷனால் பாவமும் மரணமும் நமக்கு சொந்தமாயிற்று! ஆனால், இரண்டாம் மனுஷனாகிய, கிறிஸ்து இயேசுவினாலே, நமக்கு பாவமன்னிப்பின் நிச்சயமும், உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உரிமையாக அளிக்கப்பட்டன!*

நாம் யாருக்குச் சொந்தமாய் வாழ்கிறோம் என்பதில்தான் "வாழ்வின் இரகசியம்" உள்ளது! *கிறிஸ்தவராகிய நாம் கிறிஸ்துவினுடையவர்களாய், வாழ்வோம் எனில், பரலோக வாழ்க்கை நம்முடையதே!

இரண்டாம் ஆதாம் நம் இயேசு எதற்காக ஒரு குழந்தையாக பிறந்தார்
இரண்டாம் ஆதாம் நம் இயேசு எதற்காக ஒரு குழந்தையாக பிறந்தார்.

நாம் அவரை முழுமையாக அன்பு செய்வதற்காக. 

நீங்கள் ஒரு குழந்தையை எவ்வாறு கொஞ்சுவீர்கள், 

எவ்வாறு உங்கள் அன்பை காட்டுவீர்கள்.

 இப்படித்தானே - லு லு, குல் குல் குல், பர பர பர பர என்று பல வித்தியாசமான வார்த்தைகள் கொழந்தையிடத்தில் பேசுவீர்கள், அது யாருக்கும் புரியாது.

ஆனால் குழந்தை உங்களின் அந்த வித்தியாசமான வார்த்தைகளுக்கு சிரிக்கும், மிகவும் மகிழ்ச்சியடையும். உண்மையில் நீங்களும் ஒரு குழந்தைபோல் மாறிவிடுவீர்கள்.

 இரண்டாம் ஆதாம் நம் இயேசு எதற்காக ஒரு குழந்தையாக பிறந்தார் தெரியுமா, நம் எல்லோரையும் முதல் ஆதாம் மகிழ்ச்சியை வாழ்ந்த அந்த ஏதேன் தோட்டத்திற்கு கொண்டுசெல்லத்தான். 



No comments:

Post a Comment